கிருஷ்ணர் 
ஆன்மிகம்

உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடங்குகிறது

நாளை காலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து, இரவு 12 மணியளவில் கிருஷ்ணர் பிறப்பும் தாலாட்டும் நடைபெறுகிறது

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சிகள்

கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முதல் நாள் (3-ம் தேதி வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு பணிவிடையும், மாலை 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், இரவு 8.30 மணிக்கு முகிலன்விளை பிரம்மசக்தி அம்மன் குழுவினரின் மாபெரும் பக்தி இன்னிசையும், நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், கிருஷ்ணர் பிறப்பும், தாலாட்டும். அதனை தொடர்ந்து சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சிகள்

இரண்டாம் நாள் (4-ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 10 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, பகல் 11 மணிக்கு பணி விடையும், உச்சிப்படிப்பும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து புது அரிசி இனிமம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 5.30 மணிக்கு அய்யாவின் வாகன பவனி, 6.30 மணிக்கு மாபெரும் அன்னதர்மம், இரவு 8 மணிக்கு சிறுவர் சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT