ஆன்மிகம்

உவரி: சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் மிகவும் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும்.

உவரி,

தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் மிகவும் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும். இக்கோவிலில் சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார். ஆண்டுதோறும் இங்கு வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் உச்சிகால பூஜை. இரவு 1008 சுமங்கலி பூஜை, சமய சொற்பொழிவு, இசை பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடக்கிறது.

30-ந் தேதி (சனிக்கிழமை) விசாகத் திருநாள் அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாசக முற்றோதுதல், இரவு சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பக்தி இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 1 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும், மகர மீனுக்கு காட்சி கொடுத்தலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். விழா நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT