வருஷாபிஷேக பூஜை 
ஆன்மிகம்

காரியாபட்டி அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேகம்

சிறப்பு ஹோமங்களைத் தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சொர்ண அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் தொடங்கின. முதலில் விநாயகர் வழிபாட்டுடன், கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

அதன் பின்னர் மூலவர் சொர்ண அய்யப்பன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு மலர் மாலைகள், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அய்யப்ப பக்தர்கள்

இதேபோல் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், மாளிகைபுரத்து அம்மன், கருப்பசாமி உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி வந்து விழாவில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT