காஞ்சிபுரம்,
கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பொன் நிறப் பட்டு உடுத்தி வெள்ளி கவசம், திருவாபரணங்கள் சாற்றி, செவ்வரளி பூ, ரோஜாப்பூ, மல்லிகை பூ, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் ஒலிக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. உபயதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.