சிறப்பு வழிபாடு 
ஆன்மிகம்

பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

சிறப்பு யாகத்தில் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்,

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. லட்சுமி ஹயக்ரீவருக்கு பால், பன்னீர், இளநீர், புஷ்பங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

சிறப்பு யாகத்தில் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக, சிறப்பு பூஜை செய்யப்பட்ட பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT