சினிமா துளிகள்

பேரரசு மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

டைரக்டர் பேரரசு மகள் சுகிசா, ‘மின்மினி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்.

திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி உள்பட பல படங்களை இயக்கியவர் டைரக்டர் பேரரசு. இவருடைய மகள் சுகிசா, மின்மினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்.இந்த படத்தின் கதை ஒரு குழந்தையை சுற்றி பின்னப்பட்டு இருக்கிறது. அதில் டைரக்டர் பேரரசு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதுடன், படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். டைரக்டர் பிரபுசாலமனிடம் உதவி டைரக்டராக இருந்த ராஜ் விக்ரம் கதை எழுதி இயக்கியிருக்கிறார்.