புதுச்சேரி

வாய்க்கால் தூர்வாரும் பணி

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கொம்யூன், கீழத்தெரு நொச்சி திடல் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது. இதனை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT