புதுடெல்லி,
இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 130 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்கள் வருமாறு:
காலிப்பணியிடங்கள் : ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் – 130 இடங்கள்.
கல்வித்தகுதி : 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை
வயது வரம்பு : 25.11.2026 அன்று 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
சம்பள விவரம் ; தேர்வு செய்யப்படும் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணிக்கு மாதம் ரூ.21,700 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். இதனுடன் அரசு விதிகளின்படி இதர படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறைவிண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழித் தேர்வில்,
- பொது அறிவுத்திறன் மற்றும் பகுத்தறிவு – 25 கேள்விகள்
- கணிதத் திறன் – 25 கேள்விகள்
- பொது ஆங்கிலம் – 25 கேள்விகள்
- பொது அறிவு – 25 கேள்விகள்
என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும்.
விண்ணப்பக் கட்டணம் : எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.sci.gov.in/ என்ற முகவரியில் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2026