சென்னை,
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பி)-ல் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம் வருமாறு:
பணி: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer)
காலியிடங்கள்: 250 (தமிழ்நாடு -100)
பணியிடங்கள்: தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத்
சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேசி, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விவரம் அடங்கிய நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை, வேலூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், ராமநாதபுரம்
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். https://www.iob.bank.in/en/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று(24.08.2026) கடைசி நாளாகும்.