சென்னை,
தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 2,558 பேரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக மின்வாரியத்தில் சுமார் 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, உதவி கணக்கு அலுவலர் பதவியில் 100 பேர், உதவி பொறியாளர் (மின்சாரம்) பதவியில் 555 பேர், உதவி பொறியாளர் (இயந்திரவியல்) பதவியில் 212 பேர், இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில் 435 பேர் என மொத்தம் 2,558 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்து வழங்குமாறு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (டி.என்.பி.எஸ்.சி.) மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்துக்குள் வெளியாகும் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் மின்வாரியப் பணியிடங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.