சென்னை,
ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) சார்பில் 2026-ம் ஆண்டுக்கான என்.டி.பி.சி. (Graduate Level) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3,548 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கூட்ஸ் ரெயில் மேலாளர் (Goods Train Manager), தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (Chief Commercial-cum-Ticket Supervisor), இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Account Assistant-cum-Typist), மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk-cum-Typist) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 8) கடைசி நாளாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tamilanguide.in/rrb-ntpc-recruitment-2026/ என்ற இணையதள இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம்.