கல்வி&வேலைவாய்ப்பு

ரெயில்வேயில் 590 காலியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி என்ன என்ற விவரங்களை பார்க்கலாம்.

இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 590 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி என்ன என்ற விவரங்களை பின்வருமாறு;

பணியிடங்கள்; நர்சிங் சூப்ரென்டன்ட் 365, பார்மசிஸ்ட் 118, மலேரியா இன்ஸ்பெக்டர் 43, லேப் அசிஸ்டென்ட் 31, எக்ஸ்-ரே டெக்னீசியன் 25, இ.சி.ஜி., டெக்னீசியன் 4 உட்பட மொத்தம் 590 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். நர்சிங் பணியிடங்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து நர்சிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். மருந்தாளுநர் பதவிக்கு பார்மசி பிரிவில் கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும். டிஜிஎன்.எம்/ பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 ( முழு கட்டணமும் திருப்பி தரப்படும்)

விண்ணப்பிக்க கடைசிநாள்: 14.10.2026

கூடுதல் விவரங்களுக்கு: rrbapply.gov.in- என்ற இணையதளத்தை பார்க்கவும்

SCROLL FOR NEXT