கல்வி&வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடாவில் 837 காலிப்பணியிடங்கள்: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி,

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 837 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 7-ந்தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர் , மூத்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் (உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 837 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப நிதி மேலாண்மை, முதலீட்டு ஆலோசனை, வாடிக்கையாளர் உறவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை, ஆன்லைன் தேர்வு, உளவியல் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உள்ளிட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175. - இதர பிரிவினருக்கு ரூ.850.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ளவர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofbaroda.bank.in/ என்ற முகவரியில் Careers பகுதிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 7, 2026.அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT