கல்வி&வேலைவாய்ப்பு

வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு சூப்பர் வாய்ப்பு... பேங்க் ஆப் இந்தியாவில் 205 பணியிடங்கள்

மொத்தம் 205 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்கள் குறித்த அறிவிபு வெளியாகியுள்ளது. மொத்தம் 205 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு;

பணி நிறுவனம்: பேங்க் ஆப் இந்தியா

காலி பணி இடங்கள்: 205

பதவியின் பெயர்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (தலைமை மானேஜர், மூத்த மானேஜர், மானேஜர், செக்யூரிட்டி ஆபீசர், ஆபீசர், சிவில் என்ஜினீயர் உள்பட பல்வேறு பணி இடங்கள்)

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி.

வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2026

கூடுதல் : https://bankofindia.bank.in/career/recruitment-notice

SCROLL FOR NEXT