கல்வி&வேலைவாய்ப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம்: வள பகுப்பாய்வாளர் பணிக்கு வாய்ப்பு

மேலும் தகவல்களுக்கு https://www.tnadw.tn.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

சென்னை,

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க வள பகுப்பாய்வாளர் பணிக்கு வாய்ப்பு. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

வள பகுப்பாய்வாளர்கள்

தமிழ்நாடு அரசு சமூக நீதி துறையின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க சமூக நீதித்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (temporarily on contract basis) 5 வள பகுப்பாய்வாளர்கள் (Resource Analyst) தகுதியுடைய பணிநாடுநர்களிடமிருந்து விருப்ப கோரிக்கை (Expression of Interest -Eol) வரவேற்கப்படுகிறது.

பொறுப்புகள்

திட்ட கண்காணிப்பு அலகில் பணியமர்த்தப்படும் வள பகுப்பாய்வாளர்கள் (Resource Analyst) தலைமைச்செயலக துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுந்த பயனாளிகளை சென்றடைவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மாவட்டம், வட்டம் மற்றும் கிராம அளவில் ஆராய்ந்து அதனை களைவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

மாதம் ரூ. 30,000

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க உருவாக்கப்படும் திட்ட கண்காணிப்பு அலகிற்கு குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதிகள் மற்றும் கள முன்அனுபவம் கொண்டவர்களை மாதம் ரூ. 30,000/- ஊதியம் மற்றும் ரூ 10,000/- இதர படிகள் என்ற அளவில் வெளிப்பணி முகமை மூலம் வள பகுப்பாளர்கள் (Resource Analyst) நியமனம் செய்யப்படுவர்.

மின்னஞ்சல் முகவரி

இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உரிய முன்மொழிவு படிவத்தை adw.director@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26-11-2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணையதளம்

மேலும் தகவல்களுக்கு https://www.tnadw.tn.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

Name & Designation Contact No.

T. Muthuvalliyappa PA to Director (ADW) 7338801242

Kumaran, Research Officer, MEC 8608953516

Social Justice Department

N. Vivekanandan, Superintendent 7338801297

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT