Image Credits : AI  
கல்வி/வேலைவாய்ப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் 933 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்.எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 23 பிரிவுகளில் சுமார் 933 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு வரும் மே 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்றுகட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு கொள்குறி வினாக்களைக் கொண்டது என்றும் இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும். முதன்மைத் தேர்வை விரிவாக்கம் செய்து எழுதும் வகையில் இருக்கும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 24 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் முதற்கட்டத் தேர்வும் சென்னையில் முதன்மை தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பை பார்க்க : https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-26-Engl-040226.pdf