கல்வி&வேலைவாய்ப்பு

இளநிலை ‘கியூட்’ நுழைவுத் தேர்வுக்கான மாற்றப்பட்ட தேதிகள் அறிவிப்பு

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர 'கியூட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'கியூட்' தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படுகிறது.

அதன்படி, 2026-ம் ஆண்டிற்கான 'கியூட்' தேர்வு கடந்த 11-ந்தேதி தொடங்கி, 31-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், 28-ந்தேதி(இன்று) பக்ரீத் பண்டிகை வருவதால், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதனை ஏற்று இளநிலை ‘கியூட்’ நுழைவுத் தேர்வுக்கான மாற்றப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. இதன்படி ‘கியூட்’ தேர்வுகள் மே 31, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 31-ந்தேதி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜூன் 6 மற்றும் 7-ந்தேதிகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.