கல்வி&வேலைவாய்ப்பு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17-ந்தேதி ஆகும்.

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட் டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் 25-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள், அயல்நாடுவாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற் றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணைய தள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் https://adm.tanuvas.ac.in ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.