இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ள ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : ஐடிபிஐ வங்கி
காலியிடங்கள் : 1300
பணி விவரம்: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் -1,100
அசிஸ்டண்ட் மேனேஜர்(கிரேடு ஏ) - 200 என மொத்தம் 1,300
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அசிஸ்டண்ட் மேனேஜர் (கிரேடு ஏ) பணிக்கு வங்கிகள் அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.36 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.idbibank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.03.2026