கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை: 12,256- காலியிடங்கள்- எஸ்.எஸ்.சி அறிவிப்பு

ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 12,000க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

காலியிடங்கள்; வருமானவரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், புள்ளியியல் உதவியாளர், உதவி தணிக்கை அதிகாரி, சி.பி.ஐ சப் இன்ஸ்பெக்டர், தபால் உதவியாளர் உட்பட பதவிகளில் மொத்தம் 12,256 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

வயது வரம்பு: 18- வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: இரண்டு கட்ட கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும், பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.06.2026

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/home/apply

SCROLL FOR NEXT