கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை: 899 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் 899 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் (பி.ஆர்.ஓ.)

காலி இடங்கள்: 899

பதவி: டிராப்ட்மேன், இந்தி டைப்பிஸ்ட், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், ஆபரேட்டர் கம்யூனிகேஷன், எலெக்ட்ரீஷியன் உள்பட பல்வேறு பணியிடங்கள்

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு.

வயது: 18-4-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக் குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-7-2026

கூடுதல் விவரங்களுக்கு : www.bro.gov.in

SCROLL FOR NEXT