சென்னை,
யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., ---ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகளை, சிவில் சர்வீசஸ் தேர்வு வாயிலாக தேர்வு செய்கிறது. இந்த தேர்வு, முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று பிரிவாக நடக்கிறது.
முதல்நிலை தேர்வு எழுதயவர்களில், 13,343 பேர், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், நாடு முழுதும் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று, கட்டுரை பகுதிக் கான தேர்வு நடந்தது. சென்னையில் மூன்று மையங்களில் தேர்வு நடந்தது. 651 பேர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த நிலையில், 646 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வில், ஆள் மாறாட்டத்தை தடுக்க, முக அங்கீகார தொழில்நுட்பம் வழியே, ஹால் டிக் கெட்டில் உள்ள புகைப்படத்திற்கும், தேர்வர் களின் புகைப்படத்திற்கும் ஒப்பீடு செய்து, பதிவு செய்யப்பட்டது. இன்றும், நாளையும், பொதுப்பாடம் சார்ந்து, காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வு நடக்கிறது.