கல்வி&வேலைவாய்ப்பு

போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜுன் 1 - ஆம் தேதி முதல் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயிற்சி வகுப்புகள்

இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாட வாரியான துணை தேர்வுகள், மாதிரி தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சி வகுப்புகள்

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜுன் 1 - ஆம் தேதி முதல் பின்வரும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்காணும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி, தெரிவித்துள்ளார்.

புகைப்படம்

எனவே, விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size Photo) கீழ்க்கண்ட முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை செயல் அலுவலர்/ இயக்குநர்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

வ. எண் பயிற்சி வகுப்பு நாள் மற்றும் நேரம்

1 TNPSC - CTS / Group I, II, & IV நேரடி பயிற்சி வகுப்பு - Offline Class திங்கள், புதன், வெள்ளி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

2 RRB - ALP, SSC - CGL மற்றும் RRB - Group D நேரடி பயிற்சி வகுப்பு - Offline Class செவ்வாய் மற்றும் வியாழன் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

3 RRB - ALP, SSC - CGL மற்றும் RRB - Group D இணையவழி பயிற்சி வகுப்பு – Online Class செவ்வாய் மற்றும் வியாழன் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அலுவலக முகவரி : மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32. தொலைபேசி எண்: 044-22500134 9361566648