கல்வி&வேலைவாய்ப்பு

சிஆர்பிஎப் படை பிரிவில் கான்ஸ்டபிள் வேலை.. 9,195 காலி பணியிடங்கள்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 9195 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 681 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:

பணியிடங்கள்: 9,195 கான்ஸ்டபிள்

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 21 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,700- 69,100

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rect.crpf.gov.in என்ற பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. ஆனால் எஸ்.சி, எஸ்.டி, பெண்களுக்கு கட்டணம் கிடையாது