மத்திய அரசு  
கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணிகளுக்கான நேரடி நியமனம் அக்டோபர் 16 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக 2026 செப்டம்பர் 26 முதல் 2026 அக்டோபர் 16 வரை விண்ணப்பிக்கலாம்.

புதுடெல்லி,

மத்திய அரசு பணிகளுக்கான நேரடி நியமனம் அக்டோபர் 16 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

யூபிஎஸ்சி

மத்திய அரசில் பல்வேறு பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யூபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இணையதள முகவரி

​இது குறித்த விரிவான விளம்பரம் (எண். 12/2026), விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://upsc.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக 2026 செப்டம்பர் 26 முதல் 2026 அக்டோபர் 16 வரை விண்ணப்பிக்கலாம்.

​அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளை பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT