Image Credits: Grok AI 
கல்வி/வேலைவாய்ப்பு

தமிழக அரசு துறையில் டிரைவர் வேலை; மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்

8 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம்.

சென்னை,

தமிழக அரசின் சட்டத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 5 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு;

பணியிடங்கள்: டிரைவர் 05

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். குறைந்தது 5 ஆண்டுகள் டிரைவராக பணி புரிந்த அனுபவம் இருப்பது அவசியம் ஆகும்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500- ரூ.71,900-வரை சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Advocate General of Tamil Nadu, High Court, Chennai - 600104. விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2026

தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.