புதுடெல்லி,
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுத இன்று முதல் மார்ச் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். மே 3ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாகும். நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் பிஜி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக 20 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். இதனால், நடப்பு ஆண்டிலும் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.