சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தேர்வுத் திட்டம் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வில் இடம்பெறும் கேள்விகள், தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளலாம்.
“சிவில் சர்வீசஸ் தேர்வு” (Civil Services Examination) என்பது மொத்தம் இரண்டு நிலைகளைக் (Two Stages) கொண்டதாகும்.
அவை -
I. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு (Civil Services Preliminary Examination)
II. சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வு [எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு] (Civil Services Main Examination) [Written and Interview]
- ஆகியவை ஆகும்.
இந்த இரண்டு தேர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உயர்பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதல்நிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அடுத்தமுறை இந்தத் தேர்வு எழுதும்போது எல்லா தேர்வுகளையும், மறுபடியும் மீண்டும் எழுத வேண்டும். அதாவது - முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளையும் மீண்டும் எழுத வேண்டும்.
II.
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகள் (Civil Services Preliminary Examination) இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். இந்தத் தேர்வில் -
(1) தாள் – I (Paper – I) பொதுஅறிவுப் பாடம் - 200 மதிப்பெண்கள்
(2) தாள் - II (Paper – II) திறனறியும் தேர்வு - 200 மதிப்பெண்கள்
- என இருவகைத் தேர்வுகள் இடம்பெறும்.
(1) தாள் - I (Paper – I)
(2)
தாள் - 1 எனப்படும் தேர்வு 2 மணி நேரம் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். கேள்விகள் கொள்குறி வினா வகையில் (Objective Type Questions) அமைந்திருக்கும். அதாவது, - இந்தக் கேள்வித்தாளில் இடம்பெறும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் 4 பதில்கள் கொடுத்து அதில் சரியானவற்றை தேர்வு செய்யும் வகையில் தேர்வுமுறை அமையும்.
இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.
1. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய நடப்புச் செய்திகள் (Current Events of National and International Importance)
2. இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் குறித்த வரலாறு (History of India and Indian National Movement)
3. இந்திய மற்றும் உலக புவியியல் - இந்திய மற்றும் உலக புவியியல் குறித்த இயற்கை அமைப்பு, சமூக, பொருளாதாரத் தகவல்கள் (Indian and World Geography – Physical, Social, Economic, Geography of India and the World)
4. இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சி அமைப்பு - அரசியலமைப்பு, அரசியல் சட்டம், ஒழுங்கு முறைகள், பஞ்சாயத்து ராஜ், பொதுக்கொள்கைகள், உரிமைகள் மற்றும் கட்டமைப்புகள் (Indian Polity and Governance – Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues etc.)
5. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி - ஏழ்மை, சமூக இணைப்பு, மக்கள் பிரிவுகள் மற்றும் சமூக அமைப்புகள் (Economic and Social Development Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Initiatives etc)
6.சுற்றுச்சூழல்கள், பருவநிலை மாறுதல்கள் (General Issues on Environmental Ecology, Bio – diversity and Climate Change – that do not require subject specialization)
7. பொது அறிவியல் (General Science
தாள் - 1 தேர்வில் பொதுஅறிவு பற்றிய பாடங்கள் இடம்பெறுவதால் இதனை “பொதுஅறிவுப் பாடத்தேர்வு” (General Studies) என்றும் அழைப்பார்கள்.
(2) தாள் – II (Paper – II)
போட்டியாளரின் புரிந்து கொள்ளும் திறன், பிரச்சினையைத் தீர்க்கும் திறன், புத்திக்கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் விதத்தில் தாள் - 2 தேர்வு அமையும். இந்தத் தேர்வும் 2 மணி நேரம் நடத்தப்படும். இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். இந்தத் தேர்விலும் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இடம்பெறும். கொள்குறி வகை வினா அமைப்பில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.
இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.
1. புரிந்துகொள்ளும் திறன் (Comprehension)
2. இணைந்துபழகும் மற்றும் தகவல்தொடர்புத் திறன்கள் (Interpersonal Skills Including Communication Skills)
3. காரணம் அறிதல் மற்றும் பகுத்தாய்வு திறன்கள் (Logical Reasoning and Analytical Ability)
4. முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறன்கள் (Decision Making and Problem Solving Skills)
5. பொது புத்திக்கூர்மைத் திறன் (General Mental Ability)
6. பொது எண் கணிதம் [எண்கள் மற்றும் அதன் உறவுகள்] (10ம் வகுப்பு தரம்) புள்ளி விவரங்களைப் புரிந்துகொள்ளுதல் [10ம் வகுப்பு தரம்] (Basic Numeracy [Numbers and their relations, orders of magnitude etc.] [Class X level] Data Interpretation [charts, graphs, tables, Data sufficiency etc. Class X level])
7. ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன் [10ம் வகுப்பு தரம்] (English Language Comprehension Skills) (Class X Level)
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வில் (Main Examination) கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
IV.
சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு ‘எழுத்துத் தேர்வு’ மற்றும் ‘நேர்முகத்தேர்வு’ ஆகிய இரண்டு தேர்வுகளையும் உள்ளடக்கியதாக அமையும். முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெளியான பின்பு, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார்கள். விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்பினால் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமுள்ள காலிப் பணியிடங்களின் அடிப்படையில் முதன்மைத் தேர்வு எழுதுவதற்குத் தேவையான போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது, மொத்தமுள்ள காலிப் பணியிடங்களைப்போல சுமார் 12 மடங்கு விண்ணப்பத்தாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உதாரணமாக - 1000 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 12,000 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதன்மைத் தேர்வு மொத்தம் 9 பாடங்களில் நடைபெறும். இந்தப் பாடங்களை இரு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை -
I. தகுதித் தாள்கள் (Qualifying Papers)
II. தரவரிசைக்கு கணக்கிடப்படும் தாள்கள் (Papers to be counted for merit)
- ஆகியவை ஆகும்.
A. தகுதித்தாள்கள் (Qualifying Papers)
தகுதித்தாள் தேர்வுகள் (1) தாள் – A (Paper – A) மற்றும் (2) தாள் – B (Paper – B) - என இரு பிரிவுகளாக நடத்தப்படும். அவை -
இந்த இரு தாள்களின் மதிப்பெண்கள் தரவரிசைக்கு (Rank) சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டியது அவசியமாகும்.
(Papers to be counted for merit)
முதன்மைத் தேர்வு மொத்தம் 1750 மதிப்பெண்கள் கொண்டதாகும். முதன்மைத் தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழ் உட்பட ஏதேனும் ஒரு மாநில மொழியில் எழுதலாம்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 26 விருப்பப் பாடங்களில் [மொழி இலக்கியப் பாடங்கள் (Literature) உட்பட] ஏதேனும் ஒரு பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். தாள் VI, VII ஆகியவற்றிற்கான கேள்விகள் இந்த விருப்பப் பாடத்திலிருந்து இடம்பெறும்.
விருப்பப் பாடங்களாக - (1) வேளாண்மை (Agriculture), (2) கால்நடை மருத்துவம் (Animal Husbandry and Veterinary Science), (3) மானுடவியல் (Anthropology), (4) தாவரவியல் (Botany) (5) வேதியியல் (Chemistry), (6) கட்டிடப் பொறியியல் (Civil Engineering), (7) வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் (Commerce and Accountancy), (8) பொருளியல் (Economics), (9) மின்பொறியியல் (Electrical Engineering), (10) புவியியல் (Geography), (11) மண்ணியல் (Geology), (12) வரலாறு (History), (13) சட்டம் (Law), (14) மேலாண்மையியல் (Management), (15) கணிதவியல் (Mathematics), (16) இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering), (17) மருத்துவ அறிவியல் (Medical Science), (18) தத்துவவியல் (Philosophy), (19) இயற்பியல் (Physics), (20) அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் (Political Science and International Relations), (21) உளவியல் (Psychology), (22) பொது நிர்வாகம் (Public Administration), (23) சமூகவியல் (Sociology), (24) புள்ளியியல் (Statistics), (25) விலங்கியல் (Zoology), (26) மொழி இலக்கியப் பாடங்கள் (Literature) ஆகியவை ஆகும்.
மொழி இலக்கியப் பாடங்களில் (Literature Subjects) ஏதேனும் ஒன்றையும் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 26 விருப்பப் பாடங்களில் [மொழி இலக்கியப் பாடங்கள் (Literature) உட்பட] ஏதேனும் ஒரு பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். தாள் VI, VII ஆகியவற்றிற்கான கேள்விகள் இந்த விருப்பப் பாடத்திலிருந்து இடம்பெறும்.
விருப்பப் பாடங்களாக - (1) வேளாண்மை (Agriculture), (2) கால்நடை மருத்துவம் (Animal Husbandry and Veterinary Science), (3) மானுடவியல் (Anthropology), (4) தாவரவியல் (Botany) (5) வேதியியல் (Chemistry), (6) கட்டிடப் பொறியியல் (Civil Engineering), (7) வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் (Commerce and Accountancy), (8) பொருளியல் (Economics), (9) மின்பொறியியல் (Electrical Engineering), (10) புவியியல் (Geography), (11) மண்ணியல் (Geology), (12) வரலாறு (History), (13) சட்டம் (Law), (14) மேலாண்மையியல் (Management), (15) கணிதவியல் (Mathematics), (16) இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering), (17) மருத்துவ அறிவியல் (Medical Science), (18) தத்துவவியல் (Philosophy), (19) இயற்பியல் (Physics), (20) அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் (Political Science and International Relations), (21) உளவியல் (Psychology), (22) பொது நிர்வாகம் (Public Administration), (23) சமூகவியல் (Sociology), (24) புள்ளியியல் (Statistics), (25) விலங்கியல் (Zoology), (26) மொழி இலக்கியப் பாடங்கள் (Literature) ஆகியவை ஆகும்.
மொழி பாடங்களான – அசாமி (Assamese), பெங்காலி (Bengali), போடோ (Bodo), டோக்ரி (Dogri), குஜராத்தி (Gujarati), இந்தி (Hindi), கன்னடம் (Kannada), காஷ்மீரி (Kashmiri), கொங்கணி (Konkani), மைதிலி (Maithili), மலையாளம் (Malayalam), மணிப்புரி (Manipuri), மராத்தி (Marathi), நேபாளி (Nepali), ஓரியா (Oriya), பஞ்சாபி (Punjabi), சமஸ்கிருதம் (Sanskrit), சாந்தலி (Santali), சிந்தி (Sindhi), தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu), உருது (Urdu) மற்றும் ஆங்கிலம் (English) - ஆகிய மொழி இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றையும் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாம்.
முதன்மைத் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கு விடைகளை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். ஒவ்வொரு தாளிலும் தேர்வுகள் 3 மணி நேரம் நடத்தப்படும். இந்தத் தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் எழுதலாம்.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வைப்போலவே முக்கியமான தேர்வு ‘இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு’ (Engineering Services Examination) ஆகும்.
இந்தத் தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் அடுத்து பார்ப்போம்.