இந்தியாவில் மிகச்சிறந்த மேலாண்மை படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனமாக புகழ்பெற்று விளங்குவது “ஐ. ஐ. எம்” என அழைக்கப்படும் " இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் " ( INDIAN INSTITUTE OF MANAGEMENT) ஆகும்.
கல்கத்தா, அகமதாபாத் பெங்களூர், லக்னோ ,கோழிக்கோடு இந்தூர் ஷில்லாங் ,ரோதக் ,ராஞ்சி ,ராய்ப்பூர், திருச்சி , உதயப்பூர் காசிப்பூர் ,அமிர்தசரஸ் ,போதிகயா, நாக்பூர் ,சம்பல்பூர், சிர்மவூர், விசாகப்பட்டினம், ஜம்மு, மும்பை, மற்றும் கௌஹாத்தி ஆகிய இடங்களில் இந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்னும் கல்விநிறுவனம் இயங்கி வருகிறது
உலக அளவில் தரமான மேலாண்மை கல்வியை வழங்குவதற்காகவே இந்த நிறுவனங்கள் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய அரசின் நிதி உதவியோடு இந்த கல்வி நிறுவனங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அகில இந்திய நுழைவுத் தேர்வு
“காமன் அட்மிஷன் டெஸ்ட்” (COMMON ADMISSION TEST)(CAT) எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தி, இங்கு நடத்தப்படும் மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடப்பட்டு வருகிறது.
அதாவது 2027 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் மாணவ மாணவிகளை சேர்த்துக்கொள்ள, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பின்னர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
காமன் அட்மிஷன் டெஸ்ட் என்னும் இந்த நுழைவுத் தேர்வை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களைத் தவிர, இந்தியாவில் உள்ள சில முன்னணி வேளாண்மை கல்வி நிறுவனங்களும் தங்களுக்கான நுழைவுத் தேர்வாக ஏற்றுக் கொள்கின்றன. அதாவது ,இந்தத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்சேர்க்கையை அந்த கல்வி நிறுவனங்களும் நடத்துகின்றன.
கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் படிப்புகள்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்னும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் படிப்புகள் விவரம் வருமாறு:
1. பட்டப் படிப்புகள் (UNDERGRADUATE PROGRAMMES (UG))
இந்தக் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பாக கீழ்க்கண்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன
· IPM (INTEGRATED PROGRAMME IN MANAGEMENT) – 5 YEARS (BA + MBA), ( IIM INDORE, IIM ROHTAK, AND OTHERS)
· B.M.S (BACHELOR OF MANAGEMENT STUDIES) – 4 YEARS (IIM KOZHIKODE)
· B.Sc (HONS) IN ECONOMICS / DATA SCIENCE – IIM BANGALORE
· B.Sc IN MANAGEMENT & PUBLIC POLICY / DATA SCIENCE & AI – (IIM SAMBALPUR)
2. பட்ட மேற்படிப்புகள் (POSTGRADUATE PROGRAMMES (PG))
இந்த கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பாக நடத்தப்படும் படிப்புகள் விவரம் வருமாறு:
· MBA /PGP GENERAL MANAGEMENT
· PGPFABM AGRI-BUSINESS MANAGEMENT
· PGPPMPUBLIC POLICY & MANAGEMENT
· PGPSMSUSTAINABLE MANAGEMENT
· PGPEMENTERPRISE MANAGEMENT
· PGPBMBUSINESS MANAGEMENT
3.எக்ஸிக்யூட்டிவ் மற்றும் வொர்கிங் ப்ரொபஷனல் ப்ரோக்ராம்ஸ் (EXECUTIVE / WORKING PROFESSIONAL PROGRAMMES)
நிர்வாகிகள் மற்றும் பணி புரியும் வல்லுநர்கள் ஆகியோருக்கான படிப்புகள் பற்றிய விவரம் வருமாறு
· EXECUTIVE MBA / EPGP – 1-YEAR RESIDENTIAL PROGRAMME (E.G., IIM BANGALORE)
· EXECUTIVE PROGRAMME IN BUSINESS FINANCE – (IIM AHMEDABAD)
· EXECUTIVE PROGRAMME IN APPLIED FINANCE (EPAF) – (IIM CALCUTTA) (9-MONTH LIVE ONLINE)
· BLENDED MBA (BMBA) – (IIM LUCKNOW)
4. டாக்டர் பட்ட படிப்புகள் ( DOCTORAL PROGRAMMES)
டாக்டர் பட்ட படிப்புக்காக நடத்தப்படும் படிப்புகள் விவரம்
· FPM (FELLOW PROGRAMME IN MANAGEMENT) – EQUIVALENT TO A PHD, OFFERED AT ALL MAJOR IIMS
· EFPM – EXECUTIVE FELLOW PROGRAMME (FOR WORKING PROFESSIONALS)
5.சான்றிதழ் படிப்புகள் மற்றும்ஆன்லைன் படிப்புகள் (CERTIFICATE & ONLINE PROGRAMMES)
பல்வேறு மேலாண்மை சம்பந்தப்பட்ட சான்றிதழ் படிப்புகள் மற்றும்ஆன்லைன் படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன அவை பற்றி விவரங்கள்
· DIGITAL MARKETING,
· BUSINESS ANALYTICS,
· LEADERSHIP,
· DATA SCIENCE,
· FINTECH,
· SUPPLY CHAIN MANAGEMENT.
நுழைவு தேர்வு எழுத கல்வி தகுதி
“காமன் அட்மிஷன் டெஸ்ட்” என்னும் இந்த நுழைவுத் தேர்வு எழுத பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த பட்டம் பெற்றவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
இருப்பினும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களும் மாற்றுத்திறனாளிகளும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வு எழுத வயது வரம்பு கிடையாது. பட்டம் பெற்று பணியில் சேர்ந்து பணிபுரியும் இந்த தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.
இவைதவிர, கம்பெனி செகரட்டரிஷிப், சார்ட்டட் அக்கவுண்டன்சி போன்ற கணக்கியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த நுழைவு தேர்வு எழுதலாம்.
நுழைவுத் தேர்வின் அமைப்பு
இந்த நுழைவு தேர்வு ,கணினி அடிப்படையில் நடத்தப்படும் (COMPUTER BASED TEST)தேர்வாகும். மொத்தம் 120 நிமிடங்கள் இந்த தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வு மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்தாளின் மூன்று பிரிவுகள் விவரம் வருமாறு
1. மொழித்திறன் மற்றும் வாசித்து புரியும் திறன் (VERBAL ABILITY AND READING COMPREHENSION)
2. தரவு விளக்கம் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு திறன் ( DATA INTERPRETATION AND LOGICAL REASONING)
3.அளவு சார் திறனாய்வு திறன் (QUANTITATIVE APTITUDE)
மொழித்திறன் மற்றும் வாசித்து புரியும் திறன் (VERBAL ABILITY AND READING COMPREHENSION) பிரிவில் தேர்வு எழுத 24 கேள்விகள் வழங்கப்பட்டிருக்கும். இந்தக் கேள்விக்கான விடைகளை 40 நிமிடத்திற்குள் எழுதி முடிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தப் பிரிவில் READING COMPREHENSION, PARA JUMBLES, PARA COMPLETION, ODD SENTENCE OUT, PARA SUMMARY ஆகிய முக்கிய பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.
இதேபோல்,தரவு விளக்கம் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு திறன் ( DATA INTERPRETATION AND LOGICAL REASONING) விருவிலும் மொத்தம் 22 கேள்விகள் இடம் பெறும். இந்தப் பிரிவிற்கும் தேர்வு எழுத 40 நிமிடங்கள் வழங்கப்படும்.
இந்த பிரிவில் TABLES, PIE CHARTS, BAR GRAPHS, CODING-DECODING, SYLLOGISM, FAMILY TREE, BLOOD RELATIONS, CLOCKS & CALENDAR, ABSTRACT REASONING போன்ற பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
அளவு சார் திறனாய்வு திறன் (QUANTITATIVE APTITUDE) பிரிவில் மொத்தம் 22 கேள்விகள் இடம் பெறும். இந்தப் பிரிவுக்கான விடைகளை 40 நிமிடங்களுக்குள் எழுதி முடிக்க வேண்டும்.
இந்த பிரிவில் ARITHMETIC, ALGEBRA, GEOMETRY, MENSURATION, PROFIT & LOSS, TIME-SPEED-DISTANCE, TRIGONOMETRY, NUMBER SYSTEM ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த மூன்று பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 68 கேள்விகள் இடம் பெறுகிறது.
தேர்வு எழுத உதவும் நூல்கள்
"காமன் அட்மிஷன் டெஸ்ட் " என்னும் நுழைவு தேர்வை நுழைவு தேர்வை மிகச் சிறப்பாக எழுதுவதற்கு உதவியாக பல்வேறு பல்வேறு நூல்கள் உள்ளன . அவற்றுள் சில ..
1. மொழித்திறன் மற்றும் வாசித்து புரியும் திறன் (VERBAL ABILITY AND READING COMPREHENSION)
· HOW TO PREPARE FOR VERBAL ABILITY & RC FOR CAT - (ARUN SHARMA & MEENAKSHI UPADHYAY)
· WORD POWER MADE EASY - (NORMAN LEWIS)
· HIGH SCHOOL ENGLISH GRAMMAR & COMPOSITION -(WREN & MARTIN)
· 30 DAYS TO A MORE POWERFUL VOCABULARY - ( Dr. WILFRED FUNK & NORMAN LEWIS)
2. தரவு விளக்கம் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு திறன் ( DATA INTERPRETATION AND LOGICAL REASONING)
· HOW TO PREPARE FOR QUANTITATIVE APTITUDE FOR CAT -- (ARUN SHARMA)
· QUANTUM CAT - (SARVESH KUMAR VERMA)
· QUANTITATIVE APTITUDE FOR CAT -- (NISHIT K. SINHA)
· NCERT MATHS (CLASS 8–10) -- NCERT (FOR BASICS)
3. அளவு சார் திறனாய்வு திறன் (QUANTITATIVE APTITUDE)
· HOW TO PREPARE FOR DATA INTERPRETATION FOR CAT --(ARUN SHARMA)
· HOW TO PREPARE FOR LOGICAL REASONING FOR CAT -- (ARUN SHARMA )
· LOGICAL REASONING & DATA INTERPRETATION FOR CAT—( NISHIT K. SINHA) .
மேலே குறிப்பிட்டுள்ள நூல்கள் தவிர ஏராளமான நூல்கள் இந்த தேர்வு தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளன.
தேர்வு தயாரிப்புக்கு
சிறந்த முறையில் இந்த தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்சம் 10 மாதங்கள் முழுமையாக தேர்வு தயாரிப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
தொடக்கத்தில் “என்.சி.இ.ஆர்.டி” (NCERT) நூல்களை படித்து, தர்க்க ரீதியான பகுத்தறிவு திறனை வளர்க்கும் பயிற்சியை மேற்கொள்ளலாம். மேலும், ஆங்கில நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களை தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. சுமார் மூன்று மாதங்கள் இந்த பயிற்சியை
மேற்கொண்ட பின்பு, மூன்று பிரிவுகளிலும் உள்ள நூல்களை முழுமையாக படித்து புரிந்து கொண்டு பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே பல வருடங்கள் நடத்தப்பட்ட CAT தேர்வுக்கான கேள்வித்தாள்களை பெற்று, அதற்கான விடைகளை விரைவில் எழுத பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம், எந்தெந்த கேள்விகளுக்கு விடை தெரிவதில் கடினமாக உள்ளது? என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும் அந்தக் கேள்விகளுக்கான விடைகளை தெளிவாக புரிந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிலளிக்கவும் பழகிக் கொள்ளலாம். பயிற்சி தொடங்கிய 4 முதல் 6 மாதத்திற்குள் இந்த பயிற்சியை நிறைவு செய்து கொள்வது சிறப்பான வெற்றி பெற உதவும்.
பயிற்சி தொடங்கிய ஏழாவது மாதம் முதல் மாதிரி தேர்வுகளில் இடம்பெறும் (MOCK TEST) கேள்விகளுக்கான விடைகளை எழுதி பழகுவதை தொடர் பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். புகழ்மிக்க பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் மாதிரி கேள்வி பதில்கள் அடங்கிய நூல்களை பெற்றும் இந்த முறையான தயாரிப்பு பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு,
இந்த தேர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
INDIAN INSTITUTE OF MANAGEMENT KOZHIKODE
IIMK CAMPUS P.O,
KOZHIKODE,
KERALA,
PIN - 673 570
PHONE: +91 495 2809219 | +91 495 2809696 இணையதள முகவரி. https://iimcat.ac.in/