ஜே.இ.இ மெயின் தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்புகளில் இடம் பெற்ற இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் அடிப்படையில் கேள்விகள் அமைகின்றன.எனவே, இந்த பாடங்கள் பற்றிய தெளிவான புரிதலும், வேகத்துடனும், விவேகத்துடனும் துல்லியமுடனும் பதில் எழுதும் திறமையையும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போதே, வளர்த்துக் கொள்வதும் கண்டிப்பான தேவையாகும்.
ஆறு மாத அடிப்படைப் பயிற்சி
என்.சி.இ.ஆர்.டி (NCERT) நூல்களை வாங்கி வைத்து இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களை படிப்பது நல்லது. இதன்மூலம் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இந்தப் பயிற்சியை தொடக்கத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவது நல்லது.இவைதவிர, ஒவ்வொரு பாடத்தில் இடம்பெற்றுள்ள தலைப்புகளில் குறிப்புகளை எடுத்துக்கொள்வதும் சிறந்ததாகும். குறிப்புகள் எடுக்கும்போதே, ஏன்? எப்படி? எதற்கு? எங்கு? எதனால்? எப்பொழுது?- என சில கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களையும் கண்டறிந்து அதிக கவனத்தோடு படிப்பது நல்லது.
மூன்று மாத முழுமையான பயிற்சி
ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கான முதல் ஆறு மாத பயிற்சிகளை நிறைவு செய்தபின்பு, அடுத்தக் கட்டமாக மூன்று மாதங்களுக்கு முழுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஜே.இ.இ மெயின் தேர்வு வினாத்தாள்களை சேகரித்து, அவற்றிற்கான பதில்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதிப் பார்த்து பயிற்சி செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கான கேள்வித்தாள்களுக்கான சரியான பதிலை கண்டுபிடித்து அதனை முழுமையாக மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது.
ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனியாக தலைப்புகள் அடிப்படையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பாடங்களை நினைவில் கொள்வது சிறந்த பயிற்சியாகும். மேலும், புரிந்து கொள்வதற்கு கடினமான பாடப்பகுதிகளைதிரும்பத்திரும்ப படித்து, மனதில் நிறுத்தி, தேர்வு நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
திருப்புதல் தேர்வு பயிற்சி
ஒவ்வொரு பாடத் தலைப்பிலும் கேள்விகளை தேர்ந்தெடுத்து திரும்பத் திரும்ப பதில் எழுதி விரைவாக பதில் எழுதும் பயிற்சியை மேற்கொள்ளலாம். அதாவது, “ரிவிஷன் டெஸ்ட்” எனப்படும் “திருப்புதல் தேர்வு” எழுதும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. திருப்புதல் தேர்வு பயிற்சியின்மூலம் விடைகள் எழுதும்போது, என்னென்ன தவறுகள் ஏற்படுகின்றன? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மேலும், தவறுகளை திருத்தவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் எழுதவும் தேவையான பயிற்சியை எளிதில் பெற இயலும். நினைவில் நிற்கும் ஃபார்முலாக்களை திரும்பத்திரும்ப எழுதி பார்ப்பதன்மூலம் அதிக மதிப்பெண்கள் இந்தத் தேர்வில் பெற வாய்ப்பு உள்ளது.
நேர நிர்வாகம்
நாள்தோறும் சுமார் ஆறு மணிமுதல் எட்டு மணிவரை தேர்வுக்கான பாடங்களை படிப்பது நல்லது. இதுதவிர, தினமும் சுமார் 2 மணி நேரம் பாடங்களில் உள்ள முக்கிய கணக்குகளுக்கான தீர்வுகளை கண்டுபிடித்து, பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதனைத்தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் நாள்தோறும் திருப்புதல் நேரமாக (REVISION TIME) ஒதுக்கி, படித்தப் பாடங்களை மீண்டும் படிக்க வேண்டும்.
மாதிரி தேர்வுகள் (MOCK TESTS) எழுதுவதற்கு தனியாக ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்கி நேரத்திட்டம் (TIME TABLE) வகுத்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதியபின்பு சுமார் இரண்டு மணிநேரம் அந்தத் தேர்வு பற்றிய பகுத்தாய்வு (ANALYSIS) செய்யும் பழக்கத்தையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
பாடங்கள் - சில முக்கிய தலைப்புகள்.
ஜே.இ.இ. மெயின் நுழைவு தேர்வுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் பாடங்கள் தேர்வுக்கான பாடங்களாக அமைந்தாலும், பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடங்களையும் படித்து, நினைவில் நிறுத்திக் கொள்வது சிலருக்கு இயலாத நிலையை உருவாக்கிவிடும்.கீழே குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பாடத் தலைப்புகளில் அதிக கவனம் செலுத்தி தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்வது நல்லது.
இயற்பியல் (PHYSICS)
· MECHANICS
· UNITS AND DIMENSIONS
· ERRORS AND MEASUREMENTS
· KINEMATICS
· LAWS OF MOTION
· WORK, ENERGY AND POWER
· CIRCULAR MOTION
· CENTRE OF MASS
· ROTATIONAL MOTION
· GRAVITATION
· THERMAL PHYSICS
· MECHANICAL PROPERTIES OF SOLIDS
· MECHANICAL PROPERTIES OF FLUIDS
· THERMAL EXPANSION
· CALORIMETRY
· KINETIC THEORY OF GASES
· THERMODYNAMICS
· OSCILLATIONS AND WAVES
· SIMPLE HARMONIC MOTION
· WAVES
· SOUND WAVES
· ELECTRICITY AND MAGNETISM
· ELECTROSTATICS
· CAPACITORS
· CURRENT ELECTRICITY
· MAGNETIC EFFECTS OF CURRENT
· MAGNETISM AND MATTER
· ELECTROMAGNETIC INDUCTION
· ALTERNATING CURRENT
· OPTICS
· RAY OPTICS
· WAVE OPTICS
· MODERN PHYSICS
· DUAL NATURE OF MATTER
· ATOMS
· NUCLEI
· SEMICONDUCTOR ELECTRONICS
· OTHER IMPORTANT
· COMMUNICATION SYSTEMS
· ELECTROMAGNETIC WAVES
· EXPERIMENTAL PHYSICS
· PRACTICAL PHYSICS CONCEPTS
வேதியியல் (CHEMISTRY)
· PHYSICAL CHEMISTRY
· MOLE CONCEPT
· ATOMIC STRUCTURE
· CHEMICAL BONDING
· STATES OF MATTER
· THERMODYNAMICS
· CHEMICAL EQUILIBRIUM
· IONIC EQUILIBRIUM
· REDOX REACTIONS
· ELECTROCHEMISTRY
· CHEMICAL KINETICS
· SURFACE CHEMISTRY
· SOLID STATE
· SOLUTIONS
· COLLIGATIVE PROPERTIES
· INORGANIC CHEMISTRY
· PERIODIC TABLE
· HYDROGEN
· S-BLOCK ELEMENTS
· P-BLOCK ELEMENTS (GROUP 13-18)
· D-BLOCK ELEMENTS
· COORDINATION COMPOUNDS
· METALLURGY
· ENVIRONMENTAL CHEMISTRY
· ORGANIC CHEMISTRY
· GENERAL ORGANIC CHEMISTRY (GOC)
· HYDROCARBONS
· HALOALKANES AND HALOARENES
· ALCOHOLS, PHENOLS AND ETHERS
· ALDEHYDES AND KETONES
· CARBOXYLIC ACIDS
· AMINES
· BIOMOLECULES
· POLYMERS
· CHEMISTRY IN EVERYDAY LIFE
· ORGANIC REACTION MECHANISMS
கணிதவியல் (MATHEMATICS)
· ALGEBRA
· SETS AND RELATIONS
· COMPLEX NUMBERS
· QUADRATIC EQUATIONS
· SEQUENCES AND SERIES
· BINOMIAL THEOREM
· PERMUTATION AND COMBINATION
· PROBABILITY
· MATRICES
· DETERMINANTS
· MATHEMATICAL REASONING
· TRIGONOMETRY
· TRIGONOMETRIC FUNCTIONS
· TRIGONOMETRIC IDENTITIES
· INVERSE TRIGONOMETRIC FUNCTIONS
· COORDINATE GEOMETRY
· STRAIGHT LINE
· PAIR OF STRAIGHT LINES
· CIRCLE
· PARABOLA
· ELLIPSE
· HYPERBOLA
· CALCULUS (MOST IMPORTANT)
· LIMITS
· CONTINUITY AND DIFFERENTIABILITY
· DIFFERENTIATION
· APPLICATIONS OF DERIVATIVES
· INDEFINITE INTEGRATION
· DEFINITE INTEGRATION
· DIFFERENTIAL EQUATIONS
· VECTORS AND 3D
· VECTORS
· THREE DIMENSIONAL GEOMETRY
· MISCELLANEOUS
· STATISTICS
· MATHEMATICAL MODELLING
· LINEAR PROGRAMMING
· HEIGHT AND DISTANCE
தேர்வுக்கு உதவும் நூல்கள்.
ஜே.இ.இ. மெயின் தேர்வை சிறப்புடன் எழுதி வெற்றி பெற விரும்புபவர்கள், கீழ்க்கண்ட நூல்களை வாங்கிப் படிப்பது நல்லது.இந்தநூல்கள் தவிர, வேறு சில நூல்களும் தங்களுக்கு நிச்சயம் உதவும். எனவே, தங்களின் விருப்பத்திற்குஏற்ப தரமான நூல்களை தேர்வு செய்து படிப்பது நல்லது.
இயற்பியல் (PHYSICS)
S.No BOOKS AUTHOR / PUBLICATIONS
1. CONCEPTS OF PHYSICS (VOL I and II H.C. VERMA
2. CONCEPTS OF PHYSICS VOL 1 and 2 H.C. VERMA
3. FUNDAMENTALS OF PHYSICS HALLIDAY, RESNICK and WALKER
4. PROBLEMS AND SOLUTION OF PHYSICS SHASHI BHUSHAN TIWARI
5. PROBLEMS IN GENERAL PHYSICS I.E.IRODOV
6. PROBLEMS IN PHYSICS S.S. KROTOV
7. UNDERSTANDING PHYSICS SERIES D.C. PANDEY (ARIHANT)
8. UNDERSTANDING PHYSICS FREEDMAN AND YOUNG
வேதியியல் (CHEMISTRY)
S.No BOOKS AUTHOR / PUBLICATIONS
1. NCERT TEXTBOOKS (CLASS 11 and 12)
2. CONCEPT OF PHYSICAL CHEMISTRY P. BAHADUR
3. CONCISE INORGANIC CHEMISTRY J.D. LEE
4. MODERN APPROACH TO CHEMICAL CALCULATIONS R.C. MUKHERJEE
5. NCERT/CBSE TEXTBOOKS FOR CLASS 11TH, 12TH
6. NUMERICAL CHEMISTRY P.BAHADUR
7. ORGANIC CHEMISTRY M.S.CHAUHAN
8. ORGANIC CHEMISTRY MORRISON and BOYD
9. ORGANIC CHEMISTRY O.P. TANDON
10. PHYSICAL CHEMISTRY NARENDRA AWASTHI
11. PHYSICAL CHEMISTRY P.W. ATKINS
கணிதவியல் (MATHEMATICS)
S.No BOOKS AUTHOR / PUBLICATIONS
1. CENGAGE MATHEMATICS SERIES G.TEWANI
2. ALGEBRA DR.S.K.GOYAL
3. ALGEBRA/CALCULUS SERIES AMIT M AGARWAL
4. CENGAGE MATHS SERIES G.TEWANI
5. COMPLETE MATHEMATICS FOR JEE MAIN RAVI PRAKASH, AJAY KUMAR, USHA GUPTA
6. COORDINATE GEOMETRY S.L.LONEY
7. DIFFERENTIAL CALCULUS AMIT M AGGARWAL
8. IIT MATHEMATICS M.L. KHANNA
9. INTEGRAL CALCULUS AMIT M AGGARWAL
10. MATHEMATICS FOR JEE R.D. SHARMA
11. OBJECTIVE MATHEMATICS R.D. SHARMA
12. PLANE TRIGONOMETRY S.L. LONEY
13. PLAY WITH GRAPHS AMIT M AGGARWAL
14. THE ELEMENTS OF COORDINATE GEOMETRY S.L. LONEY
ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாரிப்பை மேற்கொண்டவர்கள் சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள். தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் குறிப்பாக பாடத்திட்டம், தேர்வுக்கு பயன்படும் நூல்கள் மற்றும் முக்கிய பாடத் தலைப்புகளோடு முறையான நேரம் ஒதுக்கி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.