கல்வி&வேலைவாய்ப்பு

கேட் நுழைவுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? - முழு விவரம்

கேட் நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும்.

GRADUATE APTITUDE TEST IN ENGINEERING (GATE) என்னும் நுழைவு தேர்வு.

“கேட்” (GATE) என்னும் நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மாணவ மாணவிகள் வளர்த்துக் கொள்வதற்காக நடத்தப்படுகின்ற இந்த தேர்வு GRADUATE APTITUDE TEST IN ENGINEERING என அழைக்கப்படுகிறது. இதனை சுருக்கமாக கேட் (GATE) என அழைப்பார்கள்

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வு பற்றிய அறிவிப்பு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

இந்த நுழைவு தேர்வுஐஐடி (IIT )என அழைக்கப்படும்"இந்திய தொழில் நுட்ப கழகங்கள்"மற்றும் IISC என அழைக்கப்படும் இந்திய அறிவியல் கழகம் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்ற நுழைவுத் தேர்வு ஆகும்.

பொதுவாக, எம்.டெக்( M.Tech), எம். இ (M.E ) ,எம். எஸ் (M.S) , பி ஹெச்டி (Ph.D) போன்ற படிப்புகளை ஐ.ஐ.டி (II T) ,ஐ.ஐ.எஸ்சி (IISC), என் .ஐ .டி (NIT), ஐ . ஐ. ஐ டி(IIIT) மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்கு இந்த “கேட்” நுழைவு தேர்வு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

சி .எஸ் .ஐ .ஆர் (CSIR ), டி .ஆர் .டி .ஓ (DRDO) ஐ .எஸ் .ஆர். ஓ.(ISRO) போன்ற ஆய்வு நிறுவனங்களிலும் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் பணிகளை சேரவும் உதவித்தொகை பெறவும் இந்த தேர்வு உதவிகரமாக அமைகிறது.

சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து படிக்க இந்த நுழைவு தேர்வு பக்க பலமாக அமைகிறது.

தேர்வு எழுத தகுதிகள்.

கேட் (GATE) என்னும் இந்தத் தேர்வை பொறியியல் பட்டப் படிப்பு, தொழில்நுட்ப பட்ட படிப்பு, மற்றும் அறிவியல் பட்ட படிப்பு ஆகியவற்றை படித்து பட்டம் பெற்றவர்கள் எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். குறிப்பாக-

· B.E./B.TECH./B.PHARM.

· B. ARCH.

· B.SC. (RESEARCH)/B.S.

· PHARM. D. (AFTER 10+2)

· M.B.B.S./B.D.S./B.V.SC.

· M. SC./M.A./M.C.A. OR EQUIVALENT

· INT. M.E./M.TECH. (POST-B.SC.)

· INT. M.E./M.TECH./ M.PHARM. OR DUAL DEGREE (AFTER DIPLOMA OR 10+2)

· B.SC./B.A./B.COM.

· INT. M.SC./INT. B.S./M.S.

· PROFESSIONAL SOCIETY* EXAMINATIONS (EQUIVALENT TO B.E./ B.TECH./B.Arch.)

· B.SC. (AGRICULTURE, HORTICULTURE, FORESTRY)

-ஆகியவற்றை படித்து பட்டம் பெற்றவர்கள் எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

இருப்பினும், இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

வேலை வாய்ப்புகள்.

கேட் (GATE) நுழைவுத் தேர்வு எழுதி சிறப்பான வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் உள்ள ஐஐடி (IIT) மற்றும் சில உயர் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பு (POST GRADUATE PROGRAMMES) படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவை தவிர, இந்திய அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களில் (PUBLIC SECTOR UNDERTAKINGS) இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வேலை வாய்ப்புகள் பெறலாம்.

குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான பெரிய நிறுவனங்களில் மகா ரத்னா, நவ ரத்னா மற்றும் மினி ரத்னா பிரிவுகள் கொண்ட நிறுவனங்களில் எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், எரிசக்தி, உற்பத்தி மற்றும் நிதி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான NTPC என அழைக்கப்படும் “நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்”

( NATIONAL THERMAL POWER CORPORATION LIMITED) , IOCL என அழைக்கப்படும் “இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்” ( INDIAN OIL CORPORATION LIMITED), ONGC என அழைக்கப்படும் “எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்” (OIL AND NATURAL GAS CORPOATION) , BHEL எனப்படும் “பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்” (BHARAT HEAVY ELECTRICALS LTD) போன்ற நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

தேர்வுக் கட்டணம்.

கேட் நுழைவுத் தேர்வு எழுத தேர்வு கட்டணம் 2000 ரூபாய் ஆகும். இருப்பினும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 1000 ஆகும்.

தேர்வுத் திட்டம்

பொதுவாக இந்த தேர்வு 65 கேள்விகளை உள்ளடக்கியதாக அமைகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும்.

1. ஜெனரல் ஆட்டிட்யூட் (GENERAL APTITUTE)

2. இன்ஜினியரிங் மேத்தமேடிக்ஸ் (ENGINEERING MATHEMATICS)

3. குறிப்பிட்ட பாடங்கள் (SPECIFIC SUBJECTS)

-ஆகிய மூன்று பிரிவுகளிலும் கேள்விகள் அமையும்.

ஜெனரல் ஆட்டிட்யூட் (GENERAL APTITUTE) பகுதிக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள கேள்விகளுக்கு கண்டிப்பாக விடை அளிக்க வேண்டும்.

மேலும், இன்ஜினியரிங் மேத்தமேடிக்ஸ் (ENGINEERING MATHEMATICS) என்னும் பொறியியல் கணிதம் சம்பந்தப்பட்ட பகுதியில் இடம்பெறும் கேள்விகளுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இவை தவிர, முக்கிய பாடங்கள் (SPECIFIC SUBJECTS) பகுதிக்கு 70 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

முக்கிய பாடங்களாக-

· மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (MECHANICAL ENGINEERING)

· கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி

· (COMPUTER SCIENCE AND INFORMATION TECHNOLOGY )

· எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (ELECTRICAL ENGINEERING)

· சிவில் இன்ஜினியரிங் (CIVIL ENGINEERING)

· எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்( ELECTRONICS AND COMMUNICATION)

· ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் (AEROSPACE ENGINEERING)

· கெமிக்கல் இன்ஜினியரிங் (CHEMICAL ENGINEERING)

· மெட்டாலர்ஜி (METALLURGY),

· பயோ டெக்னாலஜி (BIOTECHNOLOGY),

· டேட்டா சயின்ஸ் (DATA SCIENCE,)

· ஹியூமனிடிஸ் (HUMANITIES)- போன்ற பல பாடங்கள் இடம்பெறுகின்றன.

கேள்விகளின் வகைகள்.

“கேட்” நுழைவுத் தேர்வில் இடம் பெறும் கேள்விகள் கொள்குறி வகை வினா அமைப்பில் அமையும்.

அதாவது,MULTIPLE CHOICE QUESTIONS(MCQ), MULTIPLE SELECT QUESTIONS (MSQ) மற்றும் NUMERICAL ANSWER TYPE (NAT) அமையும்.

MULTIPLE CHOICE QUESTIONS(MCQ) பிரிவில் இடம்பெறும் கேள்விகளுக்கு, சரியான விடை ஒன்றுக்கு ஒரு மதிப்பெண் அல்லது இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அதே வேலையில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் விதத்திலும் கேள்வித்தாள்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ,அதே வேளையில் தவறான விடைகளுக்கு MULTIPLE SELECT QUESTIONS (MSQ) மற்றும் NUMERICAL ANSWER TYPE (NAT) பகுதிகளில் மதிப்பெண்கள் குறைப்பதில்லை.

2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி “ கேட் “ (GATE) நுழைவுத் தேர்வினை இந்திய அளவில் நடத்தும் பொறுப்பை கௌஹாத்தியிலுள்ள ஐ.ஐ.டி ஏற்றுக் கொண்டது. இதன்படி, 2026 ஆம் ஆண்டு (இந்த வருடம்) பிப்ரவரி மாதத்தில் இந்த தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வுக்கான அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ,இந்த தேர்வு எழுத விரும்புபவர்கள், சுமார் ஆறு மாதத்திற்கு முன்பே எந்த தேதியில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியீடுவார்கள்? என்பதை கூர்ந்து கவனித்து உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் தேதி மாறுபடும் என்பதால் இணையதளத்தை தொடர்ந்து பார்த்து சரியான தகவலை தெரிந்து கொள்வது நல்லது.