இந்தியாவில் உள்ள புகழ்மிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனமான "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி "(INDIAN INSTITUTE OF TECHNOLOGY) என்னும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டிய நுழைவு தேர்வு, “ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (அட்வான்ஸ்ட்) ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்)” JOINT ENTRANCE EXAMINATION (ADVANCED) (JEE-ADVANCED) ஆகும்.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கல்வியினை இந்தக் கல்வி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 23 “ஐ.ஐ.டி” என அழைக்கப்படும் “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி” நிறுவனத்தின்மூலம் வழங்குகிறது.
இந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள் உயர் அதிகாரிகளாகவும், மிகச்சிறந்த தொழில்துறை வல்லுனர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் திகழ்கிறார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தொழில்நுட்ப அறிவியல் அறிஞர்களை உருவாக்குவதில் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. JEE (ADVANCED) தேர்வு எழுதுவதன்மூலம் கீழ்க்கண்ட பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
முக்கிய படிப்புகள்
"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி"(INDIAN INSTITUTE OF TECHNOLOGY) நடத்தும் முக்கிய படிப்புகள் பற்றிய விவரங்கள் வருமாறு:
1.B.Tech.- Bachelor of Technology
- இது 4 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்
2.B.Sc.- Bachelor of Science
- இது 4 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்
3.B.Arch. -Bachelor of Architecture
- இது 55ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்
4.Dual Degree B.Tech.-M.Tech.(Dual Degree Bachelor of Technology and Master ofTechnology)
- இது 5 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்
5.Dual Degree B.S.-M.S. (Dual Degree Bachelor of Science and Master ofScience)
- இது 5 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்.
6.Integrated M.Tech. Integrated Master of Technology
- இது 5 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்.
7.Integrated B.S.-M.S. Integrated Bachelor of Science and Master of Science
- இது 5 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்.
8.Dual Degree B.Tech.-MBA(Dual Degree Bachelor of Technology and Master of Business Administratio)
- இது 5 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்.
9.Dual Degree B.S.-MBA Dual Degree Bachelor of Science and Master ofBusiness Administration
- இது 5 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து படிப்புகளிலும் ஜெ.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்தப் படிப்புகள் தவிர வேறு சில பட்டப்படிப்புகளும் ஐஐடி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு வெவ்வேறு விதமான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், பெங்களூரில் உள்ள "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் "(INDIAN INSTITUTE OF SCIENCE) என்னும் நிறுவனத்தில் நடத்தப்படும் பி. டெக் (B.Tech) படிப்புகளில் சேர்வதற்கும் ஜே .இ .இ. (அட்வான்ஸ்ட்)நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாக அமைகிறது.
ஜே.இ.இ.(அட்வான்ஸ்ட்) (J.E.E (ADVANCED) நுழைவு தேர்வு எழுத தகுதிகள்
ஜே.இ.இ.(அட்வான்ஸ்ட்) (J.E.E (ADVANCED) நுழைவுத்தேர்வு எழுத ஜெ.இ.இ. மெயின்-2026 (JEE MAIN-2026) தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 2,50,000 பேர் மட்டுமே இந்தத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
பிளஸ்-2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் வெற்றி பெற்றவர்கள் இந்தத் தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத தொடர்புகொள்ள வேண்டிய இணையதள முகவரி: www.//jeemain.nta.nic.in ஆகும்.
நுழைவுத் தேர்வு எழுத பெயர் பதிவு செய்ய விரும்புபவர்கள் 06.04.2026 முதல் 02.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வு நடைபெறும் நாள்: 17.05.2026 ஆகும்.
மேலும், ஆன்லைன்மூலம் “ARCHITECTURE APTITUDE TEST” தேர்வு எழுத விரும்புபவர்கள் 02.06.2026 மற்றும் 03.06.2026 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அமைப்பு முறை (EXAM FORMAT AND PATTERN)
நுழைவுத் தேர்வில் தாள்-1 (-PAPER-1) மற்றும் தாள்-2(PAPER-2) என இரண்டு தாள்களில் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாள்களிலும் மொத்தம் 3 மணி நேரம் இந்தத் தேர்வு நடைபெறும்.
எத்தனை முறை எழுதலாம்?
பொதுவாக இந்த நுழைவுத் தேர்வை அதிகபட்சமாக இரண்டு முறை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
2026 ஆம் ஆண்டு ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வை நடத்தும் பொறுப்பை ரூர்க்கி (ROORKEE) என்னும் இடத்தில் இயங்கும் "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி" ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இந்த நுழைவுத்தேர்வு பற்றிய அனைத்து தகவல்களுக்கும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
Organizing Chair person,
JEE (Advanced) 2026,
Indian Institute of Technology Roorkee,
Roorkee-247 667.
Email: orgjee@iitr.ac.in
ஜே.இ.இ அட்வான்ஸ் நுழைவுத்தேர்வு இல்லாமல் ஐ,ஐ.டி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் படிப்புகள்.
I.Bachelor of Technology (4 YearS)
1. Abu Dhabi Campus - Chemical Engineering
2. Abu Dhabi Campus - Computer Science and Engineering
3. Abu Dhabi Campus - EnergyEngineering
4. Aerospace Engineering
5. Agricultural and Food Engineering
6. Artificial Intelligence
7. Artificial Intelligence and Data Analytics
8. Artificial Intelligence and Data Engineering
9. Artificial Intelligence and Data Science
10. Biochemical Engineering
11. Bioengineering
12. Biological Engineering
13. Biological Sciences and Bioengineering
14. Biomedical Engineering
15. Biosciences and Bioengineering
16. Biotechnology and Biochemical Engineering
17. Biotechnology and Bioinformatics
18. Ceramic Engineering
19. Chemical and Biochemical Engineering
20. Chemical Engineering
21. Chemical Science and Technology
22. Civil and Infrastructure Engineering
23. Civil Engineering
24. Computational Engineering
25. Computational Engineering and Mechanics
26. Computer Science and Engineering
27. Data Science and Artificial IntelligencE
28. Data Science and Engineering
29. Design
30. Digital Agriculture
31. Electrical and Electronics Engineering
32. Electrical Engineering
33. Electrical Engineering (IC.Design and Technology)
34. Electrical Engineering (Integrated Circuit Design and Technology
35. Electrical Engineering (Power and Automation)
36. Electronics and Communication Engineering
37. Electronics and Electrical Communication Engineering
38. Electronics and Electrical Engineering
39. Electronics Engineering
40. Energy Engineering
41. Engineering and Computational Mechanics
42. Engineering Physics
43. Engineering Science
44. Environmental Engineering
45. Environmental Science and Engineering
46. General Engineering
47. Industrial and Systems Engineering
48. Industrial Chemistry
49. Industrial Engineering and Operations Research
50. Instrumentation and Biomedical Engineering
51. Instrumentation Engineering
52. Integrated Circuit Design and Technology
53. Manufacturing Science and Engineering
54. Materials Engineering
55. Materials Science and Engineering
56. Materials Science and Metallurgical Engineering
57. Materials Science and Technology
58. Mathematics and Computing
59. Mechanical Engineering
60. Mechatronics Engineering
61. Metallurgical and Materials Engineering
62. Metallurgical Engineering
63. Metallurgical Engineering and Materials Science
64. Microelectronics and VLSI
65. Mineral and Metallurgical Engineering
66. Mining Engineering
67. Mining Machinery Engineering
68. Naval Architecture and Ocean Engineering
69. Ocean Engineering and Naval Architecture
70. Petroleum Engineering
71. Pharmaceutical Engineering and Technology
72. Production and Industrial Engineering
73. Space Science and Engineering
74. Textile Technology
II. Bachelor of Science (4Years)
1. Applied Geology
2. Applied Geophysics
3. Biological Science
4. Chemical Sciences
5. Mathematics
6. ChemistY
7. Chemistry with Specialization
8. Earth Sciences
9. Economics
10. Exploration Geophysics
11. Mathematics and Computing
12. Mathematics and Scientific Computing
13. Physics
14. Physics with Specialization
15. Statistics and Data Science
III. B.Tech. / M.Tech. / M.S. (Dual Degree) (5 Years)
1. B.Tech. in CE. - M.Tech. in Geotechnical Engineering
2. B.Tech. in CE. - M.Tech. in Structural Engineering
3. B.Tech. (CSE) and M.Tech in CSE
4. B.Tech. (ECE) - M.Tech. in VLSI
5. B.Tech. (EEE) - M.Tech. in (Power and Control)
6. B.Tech. (Mathematics and Computing) - M.Tech. in (Mathematics and Computing)
7. B.Tech (ME) - M.Tech. in Mechatronics
IV.Bachelor and Master of Technology (Dual Degree) (5 Years)
1. Aerospace Engineering
2. B.Tech. in Electronics and Communication Engineeringand M.Tech. in Communication Systems
3. Chemical Engineering
4. Computer Science and Engineerin
5. Electrical Engineering
6. Engineering Design
7. Mathematics and Computing
V. Bachelor of Architecture (5Years)
1. Architecture
VI. Bachelor of Science and Master of Science (Dual Degree) (5 Years)
1. Chemical Science
2. Chemical Sciences
3. Economics
4. Interdisciplinary Sciences
5. Mathematics and Computing
6. Physical Science
7. Physics
VII. Bachelor of Science and MBA (Dual Degree) (5 Years)
1. BS in Economics with MBA (IIM Bodh Gaya)
VIII.Bachelor of Technology and MBA (Dual Degree) (5 Years)
1. B.Tech (Artificial Intelligence and Data Science) - MBA inDigital Business Management(IIM Bodh Gaya)
2. B.Tech (Chemical Engineering) - MBA in Hospital and Health Care Management (IIM Bodh Gaya)
3. B.Tech (Chemical Science and Technology) - MBA in Hospital and Health CarManagement (IIM Bodh Gaya)
4. B.Tech (Civil Engineering) -MBA (IIM Bodh Gaya)
5. B.Tech Computer Science and Engineering) - MBA in Digital Business ManagemenT (IIM Bodh Gaya)
6. B.Tech (Electrical and Electronics Engineering) - MBA (IIM Bodh Gaya)
7. B.Tech (Electronics and Communication Engineering) - MBA in Hospital and Healthcare Management (IIM Bodh Gaya)
8. B.Tech (Engineering Physics) - MBA (IIM Bodh Gaya)
9. B.Tech (Mathematics and Computing) - MBA in Digital Business Management (IIM Bodh Gaya)
10. B.Tech (Mechanical Engineering) - MBA (IIM Mumbai)
11. B.Tech (Metallurgical and Materials Engineering) - MBA (IIM Bodh Gaya)
12. B.Tech Mining Engineering and MBA in Logistic and Supply Chain Management (IIM Mumbai)
IX. Integrated Master of Technology (5 Years)
1. Applied Geology
2. Applied Geophysics
3. Geological Technology
4. Geophysical TechnoloGY
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்தப்படும் இடங்கள்
இந்தியாவில் கீழ்க்கண்ட இடங்களில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்னும் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
East Zone
1. Indian Institute of Technology, Bhubaneswar
2. Indian Institute of Technology, Kharagpur
3. Indian Institute of Technology (ISM), Dhanbad
4. Indian Institute of Technology, Bhilai
Central Zone
1. Indian Institute of Technology, Kanpur
2. Indian Institute of Technology (BHU), Varanasi,
3. Indian Institute of Technology, Indore
North-Central Zone
1. Indian Institute of Technology, Delhi
2. Indian Institute of Technology, Jammu
3. Indian Institute of Technology, Jodhpur
North-East Zone
1. Indian Institute of Technology, Guwahati
2. Indian Institute of Technology, Patna
North Zone
1. Indian Institute of Technology, Roorkee
2. Indian Institute of Technology, Mandi
3. Indian Institute of Technology, Ropar
South Zone
1. Indian Institute of Technology, Madras
2. Indian Institute of Technology, Hyderabad
3. Indian Institute of Technology, Palakkad
4. Indian Institute of Technology, Tirupati
West Zone
1. Indian Institute of Technology, Bombay
2. Indian Institute of Technology, Dharwad
3. Indian Institute of Technology, Gandhi nagar
4. Indian Institute of Technology, Goa
புகழ்மிக்க இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எதிர்காலம் நிச்சயம் மிகச் சிறப்பாக அமையும்.