Image Credits: AI 
கல்வி/வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை: நர்சிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ளன எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு;

பணி நிறுவனம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)

பணி இடங்கள்: 2,551

பதவி: நர்சிங் ஆபீசர்

கல்வி தகுதி: பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் (டி.ஜி.என்.எம்.)

வயது: 16-3-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனா ளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: என்.ஓ.ஆர்.இ.டி. பொது தகுதித்தேர்வு அடிப்படை யில் முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-3-2026

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.aiimsexams.ac.in/