கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 2026-ம் ஆண்டுக்கான பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர், டர்னர், மெக்கானிக், எலெக்ட்ரிஷியன், வையர்மேன், பிளம்பர், ஸ்னோகிராப்பர் உள்ளிட்ட 607 காலிப்பணியிடங்களுக்கு தொழிற்பயிற்சி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இது பற்றிய விவரங்கல் பின்வருமாறு:-
பணி நிறுவனம்: என்எல்சி இந்தியா
பதவியின் பெயர்: அப்ரெண்டீஸ்-தொழில் பழகுநர் பயிற்சி பிட்டர், பிட்டர் டர்னர், மெக்கானிக்கல், எலெக்ட்ரீஷியன் வையர்மேன்,மெக்கானிக் (டீசல்) பிளம்பர், டர்னர், மெக்கானிக்,லெக்ட்ரீஷியன் வையர்மேன், மெக்கானிக் (டீசல்) பிளம்பர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐடிஐ, தேர்வு செய்யபப்டும் நபர்களுக்கு 11 மாதங்களுக்கு மாதம் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்: 607
இணையதளம்: https://www.nlcindia.in/