Image Credits: AI 
கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மொத்தம் 495 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) என்பது மும்பையின் மசகான் பகுதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரித்து வருகிறது எண்ணெய் டேங்கர்கள், சரக்கு கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் மற்றும் படகுகளையும் கட்டி வழங்குகிறது. பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இதில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

காலியிடம்: 495

பணி விவரம்: பிட்டர் 140, எலக்ட்ரீசியன் 70, வெல்டர் 60, மெக்கானிக்கல் 40, எலக்ட்ரானிக் மெக்கானிக் 30, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 30 உட்பட மொத்தம் 495 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும்

வயது வரம்பு: 1.10.2026 தேதிப்ப்படி 15 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுமுறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. செலுத்த வேண்டும்; எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 1.7.2026

தேர்வு நடைபெறும் நாள்: 25.07.2026 (தோராயமானது)

முழு விவரங்களுக்கு : mazagondock.in