image Credits: AI  
கல்வி&வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியில் வேலை: தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.. உடனே விண்ணப்பிங்க

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த பணியிடங்க்ளுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். இது பற்றிய முழு விவரங்கள் வருமாறு;

பணி நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி.)

காலி பணி இடங்கள்: 545 (தமிழ்நாடு -51)

பதவி: லோக்கல் பேங்க் ஆபீசர் (எல்.பி.ஓ.)

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. மேலும், ரிசர்வ் வங்கியின் அட்ட வணையில் இடம்பெற்றுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய ஊரக வங்கியில் கிளார்க் / அதிகாரி பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1-7-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மொழித்திறன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-8-2026

தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்டு/செப்டம்பர்

கூடுதல் விவரங்களுக்கு: https://pnb.bank.in

SCROLL FOR NEXT