கல்வி&வேலைவாய்ப்பு

ரெயில்வேயில் வேலை: கல்வி தகுதி டிகிரிதான்.. அருமையான வாய்ப்பு

ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரெயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் - தட்டச்சர் & போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,800 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21.10.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2025

SCROLL FOR NEXT