Image Credit: ANI 
கல்வி&வேலைவாய்ப்பு

பாதுகாப்பு படையில் வேலை.. விளையாட்டு வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு

பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 95 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை ராணுவத்தின் ஒரு பிரிவான அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் காலியாக உள்ள 95 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு

பணி வழங்கும் நிறுவனம்: அசாம் ரைபிள்

காலி இடங்கள்: 95 (விளையாட்டு வீரர்கள் மட்டும்)

பதவி: ரைபிள் மேன்/ரைபிள் உமன் (ஜெனரல் டூட்டி)

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு

விளையாட்டு தகுதி: கால்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, வாள்வீச்சு, டேக்வாண்டோ, வில்வித்தை உள்பட பல்வேறு போட்டி சார்ந்த வீரர்-வீராங்கனைகள். சர்வதேசப் போட்டிகள், தேசியப் போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், பள்ளிகளுக்கு இடையேயான தேசிய விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள்.

வயது: 9-2-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-2-2026

இணையதள முகவரி: https://www.assamrifles.gov.in/join-assam-rifles

SCROLL FOR NEXT