மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பொதுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல். இணைய சேவை, டெலிகாம் சேவையில் பிஎஸ்.என்.எல். நாடு முழுவதும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் மற்றும் நிதி பிரிவில் உள்ள மூத்த நிர்வாகி டிரெய்னி (BSNL Senior Executive Trainee) பிரிவில் காலியாக உள்ள 120 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு;
பணி நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
பதவியின் பெயர்: மூத்த நிர்வாகி பயிற்சியாளர்
காலிப்பணியிடங்கள்: 120
பணியின் விவரங்கள்: டெலிகாம் ஆபரேஷன் – 95, நிதி – 25 என மொத்தம் 120 பணியிடங்கள் உள்ளன.
இப்பணியிடங்கள் பொதுப் பிரிவு – 16, எஸ்டி – 8, ஒபிசி – 31, பொதுப் பிரிவு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 51, மாற்றுத் திறனாளிகள் – 5 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெலிகாம் ஆபரேஷன் பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் / தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிதி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு பட்டயக் கணக்காளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
சம்பளம்: ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: இப்பணிக்கு https://internalexam.bsnl.co.in/ என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்: ரூ.2,500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,250 செலுத்த வேண்டும்.