சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்டம் பர்கூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.05.2026 அன்று 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
முகவரி: Bargur Cattle Research Station, Bargur, Anthiyur Taluk, Erode – 638 501, Tamil Nadu
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.05.2026