கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய நாணய அச்சக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பண் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு;

மொத்த காலியிடங்கள்: 94

பணியிட விவரம்:

ஜூனியர் டெக்னீசியன்: 65

ஜூனியர் அசிஸ்டென்ட் : 20

சூப்பர் வைசர் : 08

ஆய்வக உதவியாளர் : 01

ஹிந்தி டைப்பிஸ்ட்: 01

கல்வித்தகுதி: பணிக்கு ஏற்ப மாறுபடும்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27.04.2026 தேதியின்படி . 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம்: மும்பை, கொல்கத்தா, நொய்டா மற்றும் ஐதராபாத்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு: ₹1,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு: ₹200

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026

கூடுதல் விவரங்கள்: igmnoida.spmcil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்த்தில் தெரிந்து கொள்ளலாம்.