கல்வி&வேலைவாய்ப்பு

கடற்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை- டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

கடற்படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் முப்படைகளில் ஒன்றாக இந்திய கடற்படை விளங்குகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். கடற்படையைப் பொறுத்தவரை அதில் உள்ள பணிநிலைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கடற்படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: இந்திய கடற்படை

காலி பணி இடங்கள்: 260

பதவி பெயர்: எஸ்.எஸ்.சி (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச், எஜுகேஷன் பிராஞ்ச்,டெக்னிக்கல் பிராஞ்ச்)

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., பி.காம்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.ஏ.

வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-2-2026

இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in/