சென்னை,
ஜெர்மன் நாட்டில் பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப வல்லுநர், வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் லாரி ஓட்டுநர் பணியில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக, தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஜெர்மனியில் பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப வல்லுநர், வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் லாரி ஓட்டுநர் பணிக்காக வேலைவாய்ப்பு தேவைப்பட்டியல் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது.
பிசியோதெரபிஸ்ட் பணிக்கு தொடர்புடைய கல்வி தகுதியுடன் ஜெர்மன் மொழியில் பி2 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வணிக வாகன தொழில்நுட்ப வல்லுநர் பணிகளுக்கு தொடர்புடைய தொழில்நுட்ப கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் ஏ2 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லாரி ஓட்டுநர் பணிக்கு உரிய ஓட்டுநர் உரிமத்துடன் ஜெர்மன் மொழியில் ஏ2 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை 15.11.2026 க்குள் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22502267/6379179200/ 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.