புதுடெல்லி,
வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 119 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்கள் பின்வருமாறு;
பணி வழங்கும் நிறுவனம்: வருமான வரித்துறை (டெல்லி)
காலி இடங்கள்: 119 (விளையாட்டு வீரர்கள் மட்டும்)
பதவி: ஸ்டெனோகிராபர் - கிரேடு 2, டேக்ஸ் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (எம்.டி.எஸ்)
பணி இடம்: டெல்லி
கல்வி தகுதி: ஸ்டெனோகிராபர் பதவிக்கு 12-ம் வகுப்பும், டேக்ஸ் அசிஸ்டெண்ட் பதவிக்கு பட்டப்படிப்பும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பதவிக்கு 10-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: தடகளம், நீச்சல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ், கிரிக்கெட், கூடைப்பந்து, கைபந்து, கபடி, கால்பந்து, குத்துச்சண்டை உள்பட பல் வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்கள். சர்வதேசப் போட்டிகள், தேசி யப் போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், பள்ளிக ளுக்கு இடையேயான தேசிய விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பல்க லைக்கழக விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பாரா விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள்.
வயது: 10-11-2026 அன்றைய தேதிப்படி ஸ்டெனோகிராபர், டேக்ஸ் அசிஸ்டெண்ட் பதவிக்கு 18 முதல் 27 வயதும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பதவிக்கு 18 முதல் 25 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், விளையாட்டு தகுதிகள், படைத்த சாதனைகள், மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2026
கூடுதல் விவரங்களுக்கு : https://incometaxdelhi.gov.in/index.aspx