கல்வி&வேலைவாய்ப்பு

திருப்பூரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

திருப்பூர் அமராவதிநகரில் உள்ள 'சைனிக்' பள்ளியில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'சைனிக்' பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

பணியிடங்கள்: எம்.டி.எஸ்., 13, வார்டு பாய்ஸ் 3 -உள்பட மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பட்டப்படிப்பு + பி.பிஎட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை -1.5.2026 -தேதியின் படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

சம்பளம்: ரூ.18,000 - 56,900/- (எம்.டி.எஸ் பணிக்கு மட்டும்)

விண்ணப்பிக்கும் முறை: https://sainikschoolamaravathinagar.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Principal, Sainik School, Amaravathinagar - 642 102, Udumalpet Taluk, Tiruppur District.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2026