மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 557 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெலாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி நிறுவனம்: நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனம் (என்.சி.எல்)
காலி பணியிடங்கள்: 557
பதவி: எச்.இ.எம்.எம். ஆபரேட்டர் (டிரெய்னி), பாராமெடிக்கல் ஸ்டாப் மற்றும் மேற்பார்வையாளர் (சிவில்) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்.
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, டி.ஜி.என்.எம்., டி.பார்ம், டிப்ளமோ.
வயது வரம்பு: 1-5-2026 அன்றைய தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01-05-2026
இணையதள முகவரி: http://nclcil.in/data-listing/pages/recruitment