இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1,626 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை ஒரு ஆண்டு கால அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் ஆகும். இது குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம்.
கல்வித் தகுதி : 12-ம் வகுப்பு (+2), ஐடிஐ (ITI), டிப்ளமோ, பிஎஸ்சி, பிஏ, பிகாம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு : வயது வரம்பை பொறுத்தவரை 30.06.2026 நிலவரப்படி கணக்கில் கொள்ளப்படும். அதன்படி குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 24-ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
பயிற்சி மற்றும் உதவித்தொகை : தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். அப்ரண்டிஸ் சட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மாத உதவித்தொகையும் வழங்கப்படும்.
தேர்வு முறை : மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி : ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான IOC இணையதளத்தில் மேலும் விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள் : ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.07.2026 மாலை 05.00 மணி ஆகும்.