கல்வி&வேலைவாய்ப்பு

நிலக்கரி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் காணலாம்.

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்)

பணி இடங்கள்: 1,055

பதவி: மைனிங் சிதார் டி அண்ட் எஸ் கிரேடு சி, அசிஸ்டெண்ட் போர்மேன் (எலெக்ட்ரிக்கல்) கிரேடு சி, துணை சர்வேயர் டி அண்ட் எஸ் கிரேடு சி (மைனிங்)

கல்வி தகுதி: டிப்ளமோ, பி.இ., பி.டெக்.

வயது: 8-4-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட் பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு (மாற்றுத்திறனாளிகள் உள்பட).

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-5-2026

மேலும் விவரங்களுக்கு: https://secl-cil.in/jobs_secl