கல்வி&வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 1,484 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாக அறியப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 1,484 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணி விவரம்: டெக்னிக்கல் ஆபிசர் 253, மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் 137, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 68, அசிஸ்டென்ட் 36, நுாலக உதவியாளர் 12 என 57 வகையான பணியிடங்களில் மொத்தம் 1484 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு / டிப்ளமோ / பட்டப்படிப்பு / எம்.எஸ்சி.,

வயது வரம்பு; 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.3000 செலுத்த வேண்டும்; எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2400 கட்டணம் ஆகும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2026

கூடுதல் விவரங்களுக்கு : aiimsexams.ac.in