கல்வி&வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடாவில் வேலை: தமிழ்நாட்டில் மட்டும் 199 காலியிடங்கள்- உடனே விண்ணப்பிங்க

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. இந்த வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா

பணி இடங்கள்: 5,000 (தமிழ்நாட்டில் 199 காலி இடங்கள்)

பதவி பெயர்: அப்ரண்டீஸ் பயிற்சி (ஒரு ஆண்டு)

கல்வி தகுதி: 1-5-2026 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

வயது: 1-5-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை: மாதம் ரூ.15,000

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு, ஆவண பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-6-2026

இணையதள முகவரி: https://www.bankofbaroda.in/career/current-opportunities